குழந்தைகள் முன்னேற வழிபாடு
1 min read
Worship for children to progress
3-9-2020
எல்ரோரும் தங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்வு சிறப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அந்த குழந்தைகளுக்காக பல்வேறு கோவில்களுக்கும் செல்வார்கள். அங்கு நோத்திக்கடனையும் செய்வார்கள்.
குழந்தைகள் முன்னேற இந்த புரட்டாசி மாதம் ஒருவழிபாட்டை நடத்தலாம்.
புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை மகாளய அமாவாசை என்று அழைப்பார்கள். ஆதற்கு முந்தைய 14 நாட்கள் மகாளய பட்ச காலம் என்று பெயர். தற்போது மகாளய பட்சம்தான் நடந்து வருகிறது. இந்த காலத்தில் வரும் துவிதியை திதி நாளில் அசூன்ய சயன விரதம் இருக்க உகந்த நாள்.
லட்சுமி நாராணர்
அன்றைய தினம் லட்சுமி நாராயணரை ஊஞ்சலில் வைத்து தாலாட்டி பாசுரங்கள் பாடி வழிபட வேண்டும். இதனால் மறைந்த முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து நம்மை வாழ்த்துவார்கள். மேலும் குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும்.
அன்றைய தினம் மாலை சந்தான ஹோமம் நடத்தி பக்கத்துவீட்டு குழந்தைகளுக்கு புத்தாடைகள், பழங்கள், புத்தகங்கள் தானமாக கொடுத்தால் நமது குழந்தைகள் நல்ல முன்னேற்றம் அடைவர்.
இந்த சிறப்புக்கு உரிய நாள் இந்த ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி வெள்ளிக்கிழமை (நாளை) வருகிறது.