டெல்லி சுகாதாரத்துறை மந்திரி கைது – அமலாக்கத்துறை அதிரடி
1 min read
Delhi Health Minister Arrested – Enforcement Action
30/5/2022
டெல்லி மாநில சுகாதாரத்துறை மந்திரி கைது செய்யப்பட்டார்.
மந்திரி கைது
டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின்.
இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை அமலாக்கத் துறையினர் இன்று அதிரடியாக கைது செய்தனர்.
ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்தின் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது.