பெட்ரோல், டீசல் விலையை குறைத்ததற்கு எதிர்ப்பு- தமிழகம் உள்பட 23 மாநிலங்களில் போராட்டம்
1 min read
Opposition to reduction of petrol and diesel prices – Struggle in 23 states including Tamil Nadu
30.5.2022
எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து நாளை பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவதில்லை என விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கம், அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் சில்லறை விற்பனை விலையை உடனே மாற்றியதால் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடு செய்ய வலியுறுத்தி, நாளை ஒருநாள் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப்படுவதாக அந்த சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மேலும், கடந்த 2017ல் இருந்து இதுவரை விளிம்பு தொகை உயர்த்தப்படவில்லை எனவும், அதை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். தமிழகம் கர்நாடக, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட அகில இந்திய அளவில் 23 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.