தேனீக்கள் கொட்டி விவசாயி சாவு
1 min read
The death of the farmer who poured the bees
30.5.2022
கொப்பாவில் தேனீக்கள் கொட்டியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
தேனி கொட்டியத
சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா ஜெயப்புரா அருகே கல்லுகுட்டே பகுதியை சேர்ந்தவர் அசோக். விவசாயியான இவருக்கு சொந்தமாக அதேப்பகுதியில் தோட்டம் உள்ளது. இந்த நிலையில் அசோக் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தோட்டத்தில் மரத்தில் இருந்த தேன்கூட்டில் இருந்து கலைந்த தேனீக்கள் படையெடுத்து வந்து அசோக்கை கொட்டியது. இதில் தேனீக்கள் கொட்டியதில் அசோக் முகம், கைகளில் பலத்த காயம் அடைந்தார். அவரை அப்பகுதியினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அசோக் உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.