தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
1 min read
Demonstration against smuggling of mineral resources in Tenkasi
2/4/2023
கனிமவள கடத்தலை தடுக்க கோரி தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கனிமவள கடத்தல்
தென்காசி மாவட்டம் முழுவதிலும் இருந்து கேரளாவிற்கு கனரக லாரிகளில் கனிம வளங்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதாகவும் இதற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் அமைப்பு மற்றும் கட்சியை சேர்ந்தவர்களும் அவ்வப்போது கண்டன குரல்களையும், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு கனிமவள கடத்தலை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அண்டை மாநிலத்திற்கு நம்முடைய கனிம வளங்களை கொண்டு சென்று தென் தமிழகத்தை பாலைவனம் ஆக்கும் கனிமவள கடத்தலை கண்டிக்கிறோம் என கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தின் போது திடீரென பெய்த மழையிலும் கடத்தலுக்கு எதிராக தொடர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள், கட்சி பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.