சிலிண்டர் விலை ஏன் உயர்கிறது? பெண்களின் கேள்விக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்
1 min read
Why is cylinder price increasing? Nirmala Sitharaman’s interpretation of the question of women
2/4/2023
பாஜக சுவர் விளம்பரப் பணிகளை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். அப்போது சிலிண்டர் விலை ஏன் உயர்கிறது? பெண்களின் கேள்விக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
நிர்மலா சீதாராமன்
காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் கிராமத்திற்கு பாஜகவினரை சந்திக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். அப்போது, பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, சுவர் விளம்பரப் பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அப்பகுதி மக்களை நிர்மலா சீதாராமன் சந்தித்தார். அப்போது, சிலிண்டர் விலை உயர்வு குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், சிலிண்டர் எரிவாயுவை இறக்குமதி செய்வதால், அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டி இருப்பதாகவும், கூடுதலாக மானியம் வழங்க போதிய நிதி இல்லை என்றும் கூறினார்.
மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிட வேண்டி உள்ளதால் சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். இந்தியாவில் சிலிண்டர் எரிவாயுவை உற்பத்தி செய்யும் ஆலைகள் இல்லாதததால், சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.