புளியரை கோவிலில் பக்தர்கள் மோதல் 7 பேர் காயம்
1 min read
Devotees clash in Puliarai temple, 7 injured
Devotees clash in Puliarai temple, 7 injured3.6.2023 தென்காசி மாவட்டம், புளியரை கோட்டைவாசல் பகுதியில் உள்ள கருப்பசாமி கோவிலில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் 7 பேர் பலத்த காயமடைந்தனர் இது பற்றி புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோட்டை வாசல்
தமிழக கேரள எல்லை பகுதியான புளியரை கோட்டைவாசல் பகுதியில் கேரள மாநிலத்திற்கு சொந்தமான கோட்டை வாசல் கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு தூத்துக்குடியில் இருந்து இரண்டு குடும்பத்தினரும், புளியங்குடி மற்றும் தெற்கு மேடு பகுதியில் இருந்து இரு குடும்பத்தினரும் கடையநல்லூர் பகுதியில் இருந்து ஒரு குடும்பத்தினரும் என பல்வேறு குடும்பத்தினர் தங்களது உறவினர்களோடு ஆடு வெட்டி சாமி கும்பிட வந்துள்ளனர்.
அப்போது தூத்துக்குடியை சார்ந்தவர்கள் தாங்கள் வந்த வேனில் சத்தமாக பாட்டு போட்டு ஆட்டம் ஆடியுள்ளனர். அதற்கு தெற்கு மேடு பகுதியைச் சார்ந்த பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .அதனை தொடர்ந்து இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு தரப்பினரும் குடிபோதையில் இருந்ததால் அருகே உள்ள டீக்கடை முன்பு கிடந்த கம்புகளை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் புளியரை தெற்கு மேடு பகுதியைச் சார்ந்த மூன்று பேர்களுக்கும் தூத்துக்குடி பகுதியைச் சார்ந்த நான்கு பேர்களுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த தென்காசி காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன், செங்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் ஷியாம் சுந்தர் மற்றும் புளியரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது காயமடைந்த அனைவரையும் சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக புலியரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.