கடலூரில் போலீஸ் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை
1 min read
Rowdy shot dead in police encounter in Cuddalore
2/4/2025
கடலூர் மாவட்டம் புதுச்சத்தரித்தில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி விஜய், கடலூர் போலீசாரின் என்கவுண்ட்டரில் உயிரிழந்துள்ளார்.
லாரி ஓட்டுநரிடம் 6 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி செய்த நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி விஜய் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
கடலூரில் பதுங்கி இருந்த விஜய்யை, போலீசார் பிடிக்க முயன்றபோது அரிவாளால் தாக்கியதில் இரண்டு போலீசார் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து, தற்காப்புக்காக போலீசார் சுட்டுதாக கூறப்படுகிறது.
என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி விஜய் மீது தமிழகம், புதுவையில் 33 கொள்ளை மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த சில தினங்களாக, குற்றச்சம்பவங்களை தடுக்க என்கவுன்டர் ஆயுதத்தை அரசு கையில் எடுத்துள்ளது. கடந்த கால சில சம்பவங்கள் பின்வருமாறு;
- சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
- தேனி மாவட்டத்தில் போலீஸ்காரரை கொலை செய்த நபர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- மதுரை ரிங் ரோட்டில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பிரபல ரவுடி சுபாஸ் சந்திர போஸ் கொல்லப்பட்டான்.