ஜனாதிபதி திரவுபதி முர்மு போர்ச்சுகல் சென்றார்
1 min read
President Draupadi Murmu visited Portugal
7.4.2025
ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் அரசுமுறை பயணமாக போர்ச்சுகல் மற்றும் சுலோவாகியா நாடுகளுக்கு பயணமாகியுள்ளார்.
இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி முர்மு, முதல்கட்டமாக இன்று போர்ச்சுகல் சென்றடைந்துள்ளார்.
பிகோ மதுரோவின் இராணுவ விமான நிலையத்தில் ஜனாதிபதியை போர்ச்சுகலில் உள்ள இந்திய தூதர் புனீத் ஆர் குண்டல் மற்றும் இந்தியாவில் உள்ள போர்ச்சுகல் தூதர் ஜோவா ரிபேரோ டி அல்மீடியா ஆகியோர் வரவேற்றனர்.
இங்கு தனது 2 நாட்கள் பயணத்தை அங்கு முடித்து கொண்டு அடுத்தப்படியாக சுலோவாகியாவுக்கு செல்கிறார். அங்கு அவர் சுலோவாகியா அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி, பிரதமர் ராபர்ட் பிகோ மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ரிச்சர்ட் ராசி ஆகியோரை சந்திக்க உள்ளார்.
போர்ச்சுகல் அதிபரின் அழைப்பை ஏற்று 27 ஆண்டுக்குப் பிறகு அங்கு செல்லும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆவார். முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் கடந்த 1998-ம் ஆண்டில் போர்ச்சுகல் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பயணங்களின்போது இந்தியா-போர்ச்சுகல் மற்றும் சுலோவாகியா இடையே மூலோபாயம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.